சொந்த ஊர் திரும்பும் எம்.எல்.ஏ.க்களுக்கு பலத்த பாதுகாப்பு
சொந்த ஊருக்கு செல்ல உள்ள சசிகலா ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களது வீடு மற்றும் அலுவலகங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றிப்பெற்றதை அடுத்து சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நாளை தங்களது தொகுதிக்கு செல்ல உள்ளனர். பொதுமக்கள் சசிகலா தலைமையிலான ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அனைவரும் அவர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
இதனால் எம்.எல்.ஏ.க்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.