செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 9 மார்ச் 2023 (20:44 IST)

குளிர்சாதனப் பெட்டி வெடித்து காவல் ஆய்வாளர் பலி

Fire
பொள்ளாச்சியில் காவலர் ஒருவர் சமையல் செய்து கொண்டிருந்தபோது, குளிர்சாதன பெட்டி வெடித்துச் சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அயனாவரம் போலீஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சபரிநாத். சில நாட்களுக்கு முன் விடுமுறை எடுத்துக்கொண்டு தன் சொந்த ஊரான பொள்ளாச்சியில் உள்ள நல்லூருக்கு வந்துள்ளார்.இவர் தன் வீட்டில் இருந்த நிலையில் இன்று காலையில் சமையல் செய்து கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென்று குளிர்சாதன பெட்டி வெடித்தது.  இதில், வீட்டில், தீப்பற்றி எரிந்தது.

கீழ் தளத்தில் இருந்து சபரிநாத் வீட்டிற்கு வந்த சாந்தி என்ற( கீழ் தளத்தில் வசிப்பர்) அவரும் வீட்டில் மாட்டிக்கொண்டு கதறினர்.

இவர்களின் சத்தம் கேட்டு, அருகிலிருந்தவர்கள் சபரிநாத் மற்றும் சாந்தியை மீட்க வேண்டி, தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.  சம்பவ  இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்த பின்னர்  வீட்டிற்குள் சென்றனர். அங்கு, சாந்தியும், சபரி நாத்தும் உடல் கருகிப் பிணமாகக் கிடந்தனர்.

இவரது சடலத்தையும் மீட்டு, அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.