வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 30 செப்டம்பர் 2019 (15:29 IST)

வாரண்டி கேட்ட கன்டெக்டர்; வச்சு சாத்திய காவலர்கள்: வைரல் வீடியோ!

நாகர்கோவில் அருகே பேருந்தில் பயணித்த போலீஸாரிடம் வாரண்டி கேட்ட நடத்துனரை சரமாரியாக அடித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. 
 
குமிலியில் இருந்து நாகர்கோவிலை நோக்கி பயணித்த அரசு பேருந்தில் திருநெல்வேலி பேருந்து நிலயத்தில் இரண்டு காவலர்கள் சீருடையோடு ஏறியுள்ளனர். அப்போது வழக்கமாக டிக்கெட் எடுத்த வந்த நடத்துனர் காவர்களிடம் வாரண்டி கேட்டுள்ளார். 
 
அந்த காவலர்கள் இருவரும் பதில் அளிக்காமல் இருந்துள்ளனர். பின்னர் மற்ற பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துவிட்டு மீண்டும் அந்த காவலர்களிடம் நடத்துனர் வாரண்டி கேட்டுள்ளார். (வாரண்டி - காவல்துறை சார்பில் காவலர்களுக்கு இலவசமாக பேருந்தில் பயணம் செய்வதற்கு கொடுக்கப்படும் பயண அட்டை).
ஆனால், இந்த முறை காவலர்கள் இருவரும் நடத்துரை இரத்தம் வரும் அளவிற்கு கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் ஓட்டுனர் பேருந்தை நேராக காவல் நிலையத்திற்கு விட்டு புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட காவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வெளியே விட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
 
இருப்பினும் அந்த காவலர்கள் பேருந்தில் நடத்துனரை போட்டு அடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.