வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 28 ஜனவரி 2019 (14:54 IST)

டிக் டாக்: ஜாதி பெயரை வைத்து திட்டிய ஜந்து: பொளந்துகட்டிய போலீஸ்

டிக் டாக்கில் ஜாதி பெயரை கூறி பெண்களை விமர்சித்த வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 
சமூக வலைதளங்களில் அதிகமாக ஆதிக்கம் செலுத்தி வரும் டிக் டாக்கில் இளம் தலைமுறையினர் எந்நேரமும் மூழ்கியுள்ளனர். டான்ஸ் ஆடுவது, மிமிக்ரி என அவர்கள் செய்யும் அக்கப்போருக்கு அளவே இல்லை. சில அடாவடிகள் சீன் காட்டுவதாக நினைத்து சிக்கலில் சிக்குகின்றனர்.
 
இந்நிலையில் ஆம்பூரில் ஷூ கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வரும் ராஜா என்பவன் பெண்களை ஜாதி ரீதியாக விமர்சித்து பேசியும்,அசிங்கமான வார்த்தைகளால் கமெண்ட் அடித்தும் டிக் டாக் வீடியோவை பதிவிட்டுள்ளான். இதனை பார்த்து கொதித்துபோன மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
இதையடுத்து போலீஸார் ராஜாவை கைது செய்து சிறையில் குமுறு குமுறுவென குமுறி வருகின்றனர். இவனை மாதிரியான ஆட்களுக்கு உச்சகட்ட தண்டனை கொடுக்க வேண்டும் என மக்கள் கூறி வருகின்றனர்.