நடிகை மீது ஒருதலை காதல்: கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்!
தமிழ் சினிமா புதுமுக நடிகை ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்த வாலிபர் ஒருவர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் “ஆடி போனா ஆவணி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ருதி. இவர் கல்லூரி படிக்கும் காலத்திலேயே இவரது தூரத்து உறவுமுறையான அமுதன் என்ற வாலிபர் இவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரது காதலை ஸ்ருதி ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த வாலிபர் ஸ்ருதிக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஸ்ருதியின் தாய் சித்ராவை அமுதனும் அவரது தந்தை ராஜசேகரனும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சித்ரா அளித்த புகாரின் பேரில் போலீஸார் அமுதனையும், ராஜசேகரனையும் கைது செய்துள்ளனர்.