ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 24 மார்ச் 2020 (10:24 IST)

சும்மா சும்மா முதல்வருக்கு மிரட்டல் விடுக்கும் பாட்ஷா! – மீண்டும் கைது!

தமிழக முதல்வர் இல்லத்திற்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வரும் ஆசாமி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை காவல் கண்காணிப்பு அறைக்கு ஒரு மிரட்டல் போன் கால் வந்தது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தங்கியிருக்கும் முதல்வர் இல்லம் மற்றும் தலைமை செயலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம ஆசாமி ஒருவர் கூறியுள்ளார்.

உடனடியாக தலைமை செயலகம் மற்றும் முதல்வர் இல்லத்தில் போலீஸார் மோப்ப நாய்கள் மற்றும் வெடிக்குண்டு நிபுணர்களோடு சோதனை நடத்தினர். ஆனால் அதில் எந்த வெடிப்பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் அழைப்பு வந்த அந்த எண்ணை ட்ராக் செய்ததில் சென்னை தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த சிக்கந்தர் பாட்ஷா என்பவர் மிரட்டல் விடுத்தது கண்டறியப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

பிறகு சில நாட்களில் அவர் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் முதல்வர் இல்லத்திற்கு வெடிக்குண்டு மிரட்டல் வந்துள்ளது. உடனடியாக அந்த எண்ணை ட்ராக் செய்த போலீஸார் மீண்டும் சிக்கந்தர் பாட்ஷாதான் போன் செய்துள்ளார் என்பதை கண்டறிந்துள்ளனர். மீண்டும் சிக்கந்தர் பாட்ஷா கைது செய்யப்பட்டுள்ளார்.