வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வியாழன், 18 ஜூன் 2020 (15:25 IST)

கொரோனாவால் உயிரிழந்த காவல் ஆய்வாளருக்கு இன்று மாலை 5 மணிக்கு அஞ்சலி - டிஜிபி உத்தரவு

சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பால முரளி ( 47 ) கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில்  நேற்று  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாம்பலம் காவல் ஆய்வாளர் பால அமுரளி இன்று சிகிச்சை பலனிக்காமல் உயிரிழந்தார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பாலமுரளியை இழந்து வாடும் குடும்பத்திற்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பாலமுரளி குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுப்பணி வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் பணியின்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த  காவல் ஆய்வாளர் பாலமுரளிக்கு  இன்று மாலை 5 மணிக்கு தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறையினர் அஞ்சலி செலுத்த வேண்டும் என டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.