1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 28 ஜூலை 2016 (12:47 IST)

நவீன கவிதைகளின் முன்னோடி கவிஞர் ஞானக்கூத்தன் திடீர் மரணம்

தமிழ் நவீன கவிதைகளின் முன்னோடியாக கருதப்பட்ட கவிஞர் ஞானக்கூத்தன்(78), வயோதிகம் காரணமாக இன்று காலமானார்.


 

 
இவரின் இயற்பெயர் ரங்கநாதன். ஆனால், ஞானக்கூத்தன் என்ற பெயரில் பல கவிதைப் புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இன்றைய நவீன கவிதைகளின் முன்னோடியாக கருதப்பட்டார்.
 
சூரியனுக்கு பின்பக்கம், கடற்கரையில் சில மரங்கள் போன்றவை அவரது எழுத்தில் வெளிவந்த பிரபலமான கவிதைப் புத்தகங்கள் ஆகும். சென்னையில் வசித்து வந்த இவர், உடல் நலக் கோளாறு காரணமாக சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் மரணமடைந்தார்.
 
அவரின் மறைவுக்கு பல்வேறு எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.