திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : செவ்வாய், 18 ஜூலை 2017 (18:10 IST)

ஜெ.வின் சமையல்காரி சிறையில் சசிகலாவுடன்: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

ஜெ.வின் சமையல்காரி சிறையில் சசிகலாவுடன்: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சட்டத்தை எப்படியெல்லாம் மீறலாமோ அப்படியெல்லாம் மீறி வருவதாக தகவல்கள் வருகின்றன. கடந்த சில தினங்களாக சசிகலாவுக்கு சிறையில் விதிகளை மீறி வசதிகள் செய்து கொடுத்திருப்பதாகவும், அதற்காக லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் வரும் தகவல்கள் அதிர்ச்சி தரும் விதமாக உள்ளன.


 
 
சிறையில் சொகுசு வாழ்க்கை, பல்வேறு வசதிகள் என பல தகவல்கள் வந்தன. ஆனால் தற்போது வந்துள்ள ஒரு தகவல் தலையே சுற்றும் அளவுக்கு உள்ளது. சசிகலாவுக்கு ருசியாக சமைத்துக்கொடுக்க போயஸ் கார்டனில் உள்ள ஒரு சமையல்கார பெண் சிறையில் சசிகலாவுடனே தங்கியுள்ளாராம்.
 
இத்தனை பாதுகாப்பு அம்சங்களையும் மீறி எப்படி அந்த பெண் சிறைக்குள் கொண்டுவரப்பட்டார் என்பது மர்மமாகவே உள்ளது. சசிகலாவிடம் இருந்து பணம் வாங்கிக்கொண்டு அதிகாரிகள் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கியுள்ளதாகவும் அதில் ஒரு அறையில் அந்த போயஸ் கார்டன் சமையல்கார பெண் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜெயலலிதா இருந்த போது போயஸ் கார்டனில் அவருக்கு சமையல் செய்து கொடுக்க மூன்று பெண் சமையல்காரிகள் இருந்தனர். அவர்களில் ஒருவர் தான் தற்போது சசிகலாவுடன் சிறையில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்து பெயர் இன்னும் வெளியாகவில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போயஸ் கார்டன் சமையல்காரி ஒருவரை காணவில்லை என கூறப்பட்டது. அதன் பின்னர் அந்த சமையல்கார பெண் பெங்களூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் சமைக்கும் உணவு தான் சசிகலாவுக்கு சிறையில் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது சமையல்காரியை சிறையிலேயே தங்க வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருபக்கம் சிறையில் சொகுசு வாழ்க்கையை நடத்த சட்டத்தை அப்படியே காலில் போட்டு மிதித்துள்ள சசிகலாவும், சிறை அதிகாரிகளும். இன்னொரு பக்கம் எந்த குற்றமும் செய்யாத பெண் எப்படி சிறையில் இருக்க முடியும் என இரு மாநில மக்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.