செவ்வாய், 4 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 25 மே 2022 (08:37 IST)

நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி: புதிய திட்டங்கள் தொடக்கம்!

BJP Modi
பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார். நாளை அவர் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
பிரதமர் மோடி நாளை ஒருநாள் பயணமாக சென்னை வருகிறார்.  சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார் 
 
இந்த நிகழ்ச்சிக்கான பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று ஆய்வு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே துறையில் புதிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்
 
பிரதமர் மோடி சென்னை வருகையை அடுத்து சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது