1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 2 ஜனவரி 2024 (12:21 IST)

பாரதிதாசன் பல்கலை.க்கு வரும் முதல் பிரதமர் என்பதில் பெருமை: பிரதமர் மோடி பேச்சு

PM Modi
இந்த ஆண்டின் முதல் அரசு நிகழ்ச்சியாகவும், தமிழகத்தில் முதல் அரசு நிகழ்ச்சியாகவும் தமிழகத்திற்கு வந்துள்ளேன் என்றும், பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் பாரதிதாசன் பல்கலை.க்கு வரும் முதல் பிரதமர் என்பதில் பெருமை கொள்கிறேன் என்றும் கூறினார்,
 
பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழா எனக்கு மிகவும் சிறப்பானது எனவும், பண்டைய காலத்திலேயே காஞ்சி, மதுரை நகர்கள் கல்வியில் சிறந்து விளங்கின என்றும், 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், காந்தி, அண்ணாமலை செட்டியார் பல்கலை.களை தொடங்கினர் என்றும் பிரதமர் மோடி பாரதிதாசன் பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பேசினார்.
 
மேலும் பல்கலை கழகங்கள் எப்போதெல்லாம் சிறந்து விளங்குகிறதோ அப்போதெல்லாம் நாடு வளர்ச்சி பெறுகிறது என்றும், கல்வி என்பது அறிவோடு சகோதரத்துவத்தையும் வளர்க்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
 
 
Edited by Mahendran