திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 30 ஜூன் 2021 (07:21 IST)

சென்னையில் இன்றும் விலை உயர்ந்தது பெட்ரோல் விலை: செஞ்சுரி அடித்ததா?

சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருகிறது என்பதையும் பெட்ரோல் விலை கிட்டத்தட்ட 100 ரூபாயை நெருங்கி விட்டது என்பதையும் பார்த்து வருகிறோம். அது மட்டுமின்றி தமிழகத்தின் பல நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டி விட்டது என்பதும் ஒரு சில நகரங்களில் 101 ரூபாயை தாண்டி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சென்னையில் இன்றும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி இன்று சென்னையில் பெட்ரோல் விலை குறித்த விவரங்களை பார்ப்போம்:
 
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 31 காசுகள் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் 99.80 ரூபாய் என்ற விலைக்கு விற்பனையாகிறது. அதே போல் டீசல் விலை 26 காசுகள் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து 93.72 ரூபாய் என்ற விலைக்கு விற்பனையாகிறது.