வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 26 டிசம்பர் 2021 (07:49 IST)

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் கடந்த 51 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இன்று ஐம்பத்தி இரண்டாவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனால் சென்னையில் இன்று பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 101.40 எனவும் சென்னையில் இன்று டீசல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் சட்டமன்ற தேர்தல் முடியும் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது.