வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 4 நவம்பர் 2021 (13:30 IST)

சமையக் கேஸ் விலையையும் குறைங்க: பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை!

பெட்ரோல் டீசலுக்கான கலால் வரியை குறைத்தது போல் சமையல் கியாஸ் விலையையும் குறைக்க வேண்டும் என காங்கிரஸ் பிரமுகர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார் 
 
இன்று முதல் பெட்ரோல் டீசலுக்கான கலால் வரி குறைக்கப்பட்டது. பெட்ரோல் விலை 5 ரூபாயும் டீசல் விலை 11 ரூபாய் குறைந்தது. இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலையை குறைத்த மத்திய அரசு சமையல் கியாஸ் விலையையும் குறைக்க வேண்டும் என்று பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார் 
 
வீட்டுக்கான சிலிண்டர் 916 ரூபாய் எனவும், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 2133 ரூபாயும் என விற்பனையாகி வரும் நிலையில் சமையல் கியாஸ் விலை குறைப்பு ஏழை எளிய நடுத்தர மக்களின் தீபாவளி பரிசாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்