செவ்வாய், 4 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : திங்கள், 3 பிப்ரவரி 2025 (14:17 IST)

மீனவர்கள் கைது விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு.. கனிமொழி எம்பி கோரிக்கை..!

kanimozhi
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில் திமுக எம்பி கனிமொழி இது குறித்து பேசியபோது இந்த விவகாரத்திற்கு நிரந்தர் தீர்வு காண வேண்டும் என்று பேசினார்.

இன்று நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக எம்பி கனிமொழி அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது .மீனவர்கள் விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஒவ்வொரு முறையும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வருகிறார் என்றும் பிரதமரை சந்திக்கும் போதெல்லாம் இது குறித்து பேசி வருகிறார் என்றும் தெரிவித்தார்.

மத்திய அரசு   இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசு சார்பில் இதற்காக குழு அமைக்க போவதாக கூறி பல ஆண்டுகள் ஆகியும் அந்த குழு அமைக்கப்படவில்லை என்றும் இது தொடர்பாக கூட்டங்களை நடத்தி மீனவர்கள் கைது விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை மீட்டு தர மத்திய அரசுக்கு மீண்டும் கோரிக்கை வைக்கிறோம் என்றும் அவர் கூறினார்.  

Edited by Mahendran