ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (21:52 IST)

முதல்வர், துணை முதல்வர், ரஜினி உள்பட அனைவரும் விளக்கேற்றினர்: நாடே ஒளிர்ந்தது

முதல்வர், துணை முதல்வர், ரஜினி உள்பட அனைவரும் விளக்கேற்றினர்
பாரத பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க இன்றிரவு மிகச் சரியாக 9 மணிக்கு சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு, அகல் விளக்குகள் மெழுகுவர்த்திகள் மற்றும் டார்ச் லைட்டுகளை ஏற்றினர்
 
இதனால் தமிழகம் முழுவதும் மின்சார விளக்குகள் அணைக்கப்பட்டு அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளிர்ந்தது. மேலும் தமிழகத்தை பொருத்தவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரமுகர்கள் தங்கள் வீடுகளில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரதமரின் வேண்டுகோளை நிறைவேற்றினார் 
 
கொரோனாவுக்கு எதிரான போரில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் ஒரே நேர்கோட்டில் நின்று ஆதரவு கொடுப்போம் என்பதை என்பதை உறுதி செய்யும் வகையில் இன்று விளக்கு ஏற்றப்பட்டுள்ளதால் கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி கிடைக்கும் என அனைவருக்கும் ஒரு நம்பிக்கை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி இதுகுறித்து வேண்டுகோள் விடுத்தபோது கேலியும் கிண்டலும் செய்தவர்கள் பலரும் இன்று விளக்கே ஏற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது