வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 6 செப்டம்பர் 2021 (09:38 IST)

சென்னை பெசண்ட் நகர் கடற்கரைக்கு செல்ல தடை!

சென்னை பெசண்ட் நகர் கடற்கரைக்கு செல்ல தடை!
ஏற்கனவே சென்னை மெரினா உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரைக்கும் ஞாயிற்றுக்கிழமை செல்ல தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது தெரிந்ததே. இதனால் நேற்று சென்னை மெரினா கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நாளை சென்னையின் மற்றொரு முக்கிய கடற்கரையான பெசன்ட் நகர் கடற்கரைக்கு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயத்தில் நாளை தேர்த் திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது 
 
தேரோட்ட நிகழ்ச்சியில் பக்தர்கள் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களின் மூலம் கண்டு கொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக நாளை பெசன்ட் நகர் கடற்கரை பகுதிக்கு வாகனத்துடன் வர போலீசார் தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது