புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (09:02 IST)

ஓ.பி.எஸ் போன்ற அரசியல்வாதிகள் தேவையில்லை - மக்கள் சர்வே

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் போன்ற அரசியல்வாதிகள் நாட்டுக்கு தேவையில்லை என ஒரு கருத்துக்கணிப்பில் பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


 
 
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கில், சமீபத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ‘எங்களைப் போன்ற நல்ல அரசியல்வாதிகளை, ஆசிரியர்களாகிய நீங்கள்தான் உருவாக்க வேண்டும்’ எனக் கூறினார். 
 
இந்நிலையில், ஓ.பி.எஸ் போன்ற நல்ல அரசியல்வாதிகள் தமிழகத்திற்கு அவசியமா? என்கிற தலைப்பில், ஒரு பிரபல வார இதழ் பொதுமக்களிடம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியது. 
 
அந்த கருத்துக்கணிப்பில், ஓ.பி.எஸ் நல்ல அரசியல்வாதி இல்லை என 78.4 சதவீதமும், ஆம் என 8.2 சதவீதமும், 13.4 சதவீத மக்கள் அவர் ஒரு சராசரி அரசியல்வாதிதான் எனவும் கருத்து தெரிவித்திருந்தனர்.
 
அதேபோல், அவரின் செயல்பாடுகள் மோசமாக உள்ளது என 90.7 சதவீதமும், சரியாக செயல்படுகிறார் என 9.3 சதவீத மக்களும் கூறியிருந்தனர்.
 
மேலும், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர் செல்வம் ஆகியோரின் கூட்டுத்தலைமையில் செயல்படும் அதிமுக ஆட்சி மோசமாக உள்ளது என 74.8 சதவீதமும், சிறப்பாக உள்ளது என 5.4 சதவீத மக்களும் கூறியிருந்தனர். அதேபோல், அரசியலில் மாற்றம் தேவை என 19.8 சதவீத மக்கள் கூறியிருந்தனர்.
 
மேலும், அரசியல்வாதிகள் பதவிக்காக தன்னை மாற்றிக்கொள்ளாமல் மக்களுக்கு உண்மையானவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் இருக்க வேண்டும். காமராஜர் மற்றும் கக்கனை போல் சுயநலம் இன்றி செயல்பட வேண்டும். கண்டிப்பாக எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் போல் அரசியல்வாதிகள் இருக்கக் கூடாது என அவர்கள் கூறியிருந்தனர்.
இதில் ஆச்சர்யம் என்னவெனில், அதில் பெரும்பாலானோர் அரசியல்வாதிகள் மதிமுக தலைவர் வைகோ போல் மக்களுக்காக போராடுபவராக இருக்க வேண்டும் எனக் கூறியிருந்தனர்.
 
பொதுவாக சமூக வலைத்தளங்களில் வைகோ-வை பற்றிய எதிர்மறையான விமர்சனங்களே பெரிதும் பகிரப்படுகிறது. ஆனால், அவர் மக்களுக்காகத்தான் போராடுகிறார் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.