செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (14:59 IST)

ஈஷா யோக மைய மஹாசிவராத்தியில் மக்கள் இலவசமாகக் கலந்து கொள்ளலாம்!

Isha
கோவை மாவட்டத்தில் உள்ள ஈஷா யோக மையத்தில் இவ்வாண்டு,மஹாசிவராத்தியில், மக்கள் இலவசமாகக் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில்  ஒன்று மகா சிவராத்திரி ஆகும். அன்று முழுவதும் இரவு கண் விழித்து சிவபெருமானை வழிபடுவர். இதனால் சிவபெருமானின் ஆசிகளைப் பெறலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி இந்த விழா கொண்டாடப்படுகிறது.

குறிப்பாக, இவ்விழா கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 2023-ம் ஆண்டிற்கான மஹா சிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 18-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

சத்குரு ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் நடைபெறும் இவ்விழா தியானலிங்கத்தில் நிகழ்த்தப்படும் பஞ்சபூத ஆராதனையுடன் தொடங்கும். லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, உள்நிலையில் பரவசத்தில் ஆழ்த்தும் சக்திவாய்ந்த தியானங்கள், சத்குருவின் சத்சங்கம், கண்ணை கவரும் ஆதியோகி திவ்ய தரிசன காட்சி, பாரத பாரம்பரியத்தை பறைசாற்றும் புகழ்பெற்ற கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் விழா  நடைபெறுவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த விழாவில் சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் எனப் பலரும் கலந்து கொள்ளுவார்கள், இந்த ஆண்டு மஹாசசிவராத்தியில், மக்கள் இலவசமாகக் கலந்து கொள்ளலாம் என்றும், ஆனால், விரும்பும் பக்தர்கள், http://.co/msr23-tn என்ற லிங்கை பயன்படுத்தி தங்கள் பெயரை முன்பதிவு செய்ய வேண்டும் என்றும், அன்றிரவு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்று ஈஷா யோக மையம் தெரிவித்துள்ளது.