ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 25 டிசம்பர் 2020 (18:22 IST)

ரஜினிகாந்த் தைரியமானவர், ஆரோக்கியத்துடன் வருவார்: பிரபல நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று மதியம் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவருக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருப்பதன் காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அறிக்கை ஒன்றை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டது என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் ரஜினிகாந்த் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என அவரது கோடிக்கணக்கான ரசிகர்களும் திரையுலக பிரமுகர்களும் அரசியல் வாதிகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவால் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தியை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அவருக்கு கொரோனா இல்லை என்று மருத்துவர்கள் அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது 
 
திரு ரஜினிகாந்த் அவர்கள் நிறைந்த தைரியம் உள்ளவர். அதுமட்டுமில்லாது ஆன்மீகம் உள்ளவர்களின் ஆசீர்வாதங்களைப் பெற்று விரைவில் குணமடைவார். அவர் வணங்கும் மகா அவதார் பாபாஜியின் ஆசீர்வாதங்களை பெற்று அவர் முழுமையான ஆரோக்கியத்துடன் நாம் முன்வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது