“செல்ஃபோனை ஒரு மணி நேரம் ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள்”..
வருகிற 14 ஆம் தேதி ஒரு மணி நேரம் செல்ஃபோன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள் என பள்ளிக்கல்வித் இயக்ககம் வலியுறுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து பள்ளிக்கல்வி இயக்ககம் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், குழந்தைகள் தினத்தன்று இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை பெற்றோர்கள் செல்ஃபோன்களை அணைத்து வைத்துவிட்டு தங்களுடைய குழந்தைகளோடு நேரத்தை செலவிடுங்கள் என பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், www.gadgetfreehour.com என்ற இணையத்தளத்தில் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது தொடர்பான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.