முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குடும்பத்தோடு தற்கொலை
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குடும்பத்தோடு தற்கொலை
திண்டிவனம் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குடும்பத்தோடு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம், சர்க்கார்தோப்பு பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பொன்.குமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இவருக்கு சுமதி என்ற மனைவியும், தினகரன் என்ற மகனும், சண்முகபிரியா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று இரவு வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தனர்.
தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், மருத்துவமனை செல்லும் முன்பே, சுமதியும், சண்முகபிரியாவும் வழியில் மரணமடைந்தனர். அடுத்து, மருத்துவமனையில் பொன்.குமார் மரணமடைந்தார்.
மருத்துவமனையிலிருந்து மேல் சிகிச்சைக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது தினகரன் மரணமடைந்தார்.
இவர்களது மரணத்திற்கு காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.