1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (14:04 IST)

பல்லடம் 4 பேர் கொலை: உடல்களை வாங்க உறவினர்கள் ஒப்புதல்..!

palladam
பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் நேற்று வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளிகளை  கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் செய்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
 
மேலும் கொலையாளிகளை கைது செய்யப்படும் வரை இறந்தவர்களின் உடல்களை வாங்க மாட்டோம் என உறவினர்கள் போராட்டம் நடத்தினார். இந்த நிலையில்  பல்லடத்தில் படுகொலை செய்யப்பட்ட நான்கு பேர்களின் உடலை வாங்க உறவினர்கள் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. 
 
கொலையாளிகளை கூடிய விரைவில் கைது செய்வோம் என்று கூறிய நிலையில் ஏற்கனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் மீதமுள்ளவர்களையும் கைது செய்வோம் என போலீசார் உத்தரவாதம் தெரிவித்ததன் பெயரில் உடல்களை வாங்க ஒப்புதல் தெரிவித்துள்ளோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva