திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 26 ஜனவரி 2018 (13:42 IST)

எடப்பாடி பழனிச்சாமி ஒரு கொத்தடிமை: பழ.கருப்பையா விளாசல்!

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் தற்போது ஐக்கியமாகியுள்ள முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மோடியின் கொத்தடிமை என மிகக்கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.
 
தஞ்சாவூரில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்புறையாற்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா கலந்துகொண்டு பேசினார்.
 
அப்போது பேசிய அவர் மத்தியில் ஆளும் பாஜகவையும், தமிழகத்தில் ஆளும் அதிமுகவையும் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் எடப்பாடியைப்போல் கொத்தடிமைகளை வைத்து ஆள்கிறார் மோடி என்ற கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார். மேலும் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்று மோடியை சந்தித்த முதல் சந்திப்பிலேயே அவரிடம் சரணடைந்துவிட்டதாக கூறினார்.