வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (12:31 IST)

ரூ.70 கோடி மோசடிக்கு பச்சமுத்துவே காரணம் : பால் கனகராஜ்

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற ரூ. 70 கோடி மோசடிக்கு துணைவேந்தர் பச்சமுத்துவே காரணம் என்று வழக்கறிஞர் பால் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
 

 
சென்னையில், எஸ்ஆர்எம் கல்லூரி நிர்வாகத்திற்கும், வேந்தர் மூவிஸ் மதன் இடையே மருத்துவப்படிப்பு தொடர்பாக பல கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனையில் கருத்து வேறுபாடு எழுந்தது.
 
இதனையடுத்து, கடந்த மே மாதம் 27 ஆம் தேதி, கங்கையில் சமாதி ஆகப்போவதாக கூறி, கடிதம் எழுதி வைத்துவிட்டு வேந்தர் மூவிஸ் மதன் மாயமானார்.
 
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் இடம் வாங்கித் தருவதாகவும், மருத்துவப் படிப்பிற்கு சீட் வாங்கித் தருவதாகவும் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள், தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் சுமார் 55 புகார் மனுக்கள் கொடுத்துள்ளனர்.
 
இதற்கிடையில், சென்னை ஐகோர்ட்டில் மதனின் தாயார் தங்கம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், காணாமல் போன வேந்தர் மூவிஸ் மதனை கண்டிபிடிக்க உத்தரவிட்டது.
 
கடிதத்தில் மாணவர்களின் பணத்தை எஸ்.ஆர்.எம். கல்லூரி நிர்வாகிகளிடம் கொடுத்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மதன் மாயமானதை அடுத்து மாணவர்கள் பச்சமுத்து வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
 
இந்நிலையில், நடப்பாண்டு 109 மாணவர்கள் மதனை சந்தித்து எஸ்.ஆர்.எம். கல்லூரியில் சேர பணம் தந்தனர். 109 மாணவர்களும் மதனிடம் தந்த தொகை 70 கோடி ரூபாய் என் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த 109 மாணவர்களும் பணத்தை மீட்டுத்தரக்கோரி சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளனர். 109 பேரில் 14 மாணவர்கள் மட்டும் பணத்தை மீட்க உயர்நீதிமன்றத்தை அனுகியுள்ளனர்.  
 
மாணவர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பால்கனகராஜ் ஆஜராகி வாதாடுகையில், ‘’எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரியில் மாணவர்களை சேர்க்கும் ஏஜெண்ட்டாக இருந்தார் மதன். எஸ்..ஆர்.எம். கல்லூரியில் சேர வேண்டுமெனில் மதனிடம் பணத்தை தரச்சொன்னார் பச்சமுத்து.
 
அவர் கொடுத்த உத்தரவாதத்தை நம்பி மாணவர்கள் மதனிடம் பணம் தந்தனர். பச்சமுத்துவிடம் உள்ள பணத்தை மீட்டு பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் தரவேண்டும்” என்றார்.