வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 8 ஜனவரி 2021 (07:58 IST)

முதல்வர் என்னுடன் விவாதிக்க தயாரா? ப.சிதம்பரம் சவால்!

கடந்த சில நாட்களாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் துண்டு சீட்டு இல்லாமல் என்னுடன் விவாதத்துக்கு வர தயாரா என திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்கு சவால் விடுத்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த சவாலை ஏற்றுக் கொண்ட முக ஸ்டாலின் தன்னுடைய நிபந்தனை ஒன்றை ஏற்றுக் கொண்டால் முதல்வருடன் விவாதம் செய்ய தயார் என்றும் அறிவித்திருந்தார். 
 
இந்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் என்னுடன் விவாதம் செய்ய தயாரா என முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் பிரமுகருமான ப சிதம்பரம் அவர்கள் சவால் விடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மத்திய அரசு சமீபத்தில் அமல் செய்த வேளாண் சட்டங்களால் தமிழகத்திற்கு என்ன நன்மை என்பது குறித்து முதல்வர் என்னுடன் விவாதிக்க தயாரா என்று முன்னாள் மத்திய நிதிஅமைச்சர் ப சிதம்பர்ம் சவால் விடுத்துள்ளார். இந்த சவாலை தமிழக முதல்வர் ஏற்றுக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 
 
ஏற்கனவே மத்திய அரசின் வேளாண் சட்டங்களை முதல்வர் பழனிசாமி ஆதரித்து இருந்தார் என்பதும் ஆரம்பம் முதலே ப சிதம்பரம் இந்த மசோதாக்களை கடுமையாக எதிர்த்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது