ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (18:42 IST)

டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு ஏப்ரல் 30 வரை அவகாசம்!

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை அவகாசம் அளித்து டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்கள் ஒரு முறை நிரந்தர பதிவு கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் முடிவடைய உள்ளது.
 
இந்த் நிலையில் தற்போது அந்த அவகாசம் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் ஒவ்வொரு விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக நிரந்தர பதிவு கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் இதுவரை இணைக்காதவர்கள் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது