அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி... ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!!
அடுத்த 12 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல்.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முன்னதாக காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி கரையை கடந்த நிலையில் அடுத்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
இந்நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில்படி அடுத்த 12 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு, வட மேற்கு திசையில் இலங்கை மற்றும் தெற்கு தமிழ்நாடு கடலோர பகுதி இடையே வரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் தென் தமிழகம், கடலோர மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யலாம் என்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டின் 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.