செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 2 மார்ச் 2017 (19:45 IST)

கீழே தள்ளிவிடப்பட்டு ஜெ. அனுமதி - அப்பல்லோ டிஸ்சார்ஜ் அறிக்கையில் தகவல்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா போயஸ்கார்டன் வீட்டில் கீழே தள்ளிவிடப்பட்டு அனுமதிக்கப்பட்டதாக, அப்பல்லோ மருத்துவமனையின் டிஸ்சார்ஜ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


 

 
ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த பி.எச். பாண்டியன், முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மற்றும் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் இன்று நண்பகல் செய்தியாளர்களை சந்தித்து, ஜெ.வின் மர்ம மரணம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவைகள் பின்வருமாறு.
 
  • மறைந்த முதல்வர் ஜெயலலிதா, செப்.22ம் தேதி போயஸ் கார்டன் வீட்டில் கீழே தள்ளிவிடப்பட்டு அனுமதிக்கப்பட்டதாகவே, அப்பல்லோ மருத்துவமனையின் டிஸ்சார்ஜ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு விளக்கம் வேண்டும்.
     
  • அதேபோல், ஆம்புலன்சுக்கு ஒரு டி.எஸ்.பி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர் யார்? 
     
  • எத்தனை மணிக்கு ஆம்புலன்ஸிற்கு போன் செய்யப்பட்டது? எத்தனை மணிக்கு ஆம்புலன்ஸ் போயஸ் கார்டன் வந்தது? எத்தனை மணிக்கு ஆம்புலன்ஸ் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றது? 
     
  • ஜெ. அனுமதிக்கப்பட்டவுடன், அப்பல்லோவில் இருந்த 27 சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது ஏன்? அகற்ற சொன்னது யார்?
     
  • முக்கியமாக, ஜெ.விற்கு மத்திய அரசு அளிக்கப்பட்டிருந்த என்.எஸ்.ஜி பாதுகாவலர்கள் அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கூறியது யார்?
     
  • ஜெ. உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என, கடைசி நேரத்தில் ஜெ.விற்கு சிகிச்சையை நிறுத்த சொன்னது யார்? குடும்ப உறுப்பினர்களுக்குதான் அந்த உரிமை உண்டு. அப்படி குடும்ப உறுப்பினர் கூறியிருந்தால், அதற்கு அவர்கள் கொடுத்த ஆதாரம் என்ன? 
     
  • இயற்கையாக உயிர் பிரிய அனுமதிக்கப்பட்டதாக அப்பல்லோ நிர்வாகம் நீதிமன்றத்தில் சமர்பித்த அறிக்கையில் கூறியுள்ளது. அதற்கு விளக்கம் என்ன?
  • ஜெ.விற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் அளித்த சிகிச்சை விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும்.
     
  • நவம்பர் 2ம் தேதி முதல் டிசம்பர் 5ம் தேதி வரை வெளிநாட்டு மருத்துவர்கள் ஏன் வரவில்லை? அந்த நாட்களில் ஜெ.விற்கு எதுமாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது?
     
  • சிங்கப்பூரில் இருந்து பிசியோதெரபிஸ்ட் வந்த மர்மம் என்ன?
     
  • ஜெ.வின் கண்ணத்தில் 4 ஓட்டைகள் ஏதற்காக போடப்பட்டது? அதுபற்றி தங்களுக்கு தெரியாது என செய்தியாளர்கள் சந்திப்பில் ஏன் மருத்துவர்கள் கூறினார்கள்?
     
  • ஜெ. அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாட்களில், மருத்துவமனையில் யார் யார் அனுமதிக்கப்பட்டார்கள் என்பதற்கான வருகை பதிவேடு தர  வேண்டும்.
     
  • ஜெ. டிசம்பர் 4ம் தேதி மாலை 4.30 மணி இறந்து விட்டார் என செய்திகள் பரவியது. ஆனால், அதை மறைத்து அடுத்த நாள், அதாவது டிசம்பர் 5ம் தேதி இரவு வரை அவருக்கு என்ன சிகிச்சை கொடுக்கப்பட்டது?
     
  • என்பது உள்ளிட்ட பல கேள்விகளை ஓ.பி.எஸ் அணி எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.