வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 7 அக்டோபர் 2020 (11:49 IST)

குழப்பிவிட நினைத்த எதிர்க்கட்சிகளுக்கு குட்டு! – ஓபிஎஸ் ஓபன் டாக்!

அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்கட்சிகளின் எதிர்பார்ப்பு பொய்த்து போயுள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே ஏற்பட்ட விவாதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக அமைச்சர்கள் இருவருடனும் திடீர் கலந்தாலோசனைகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதை அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்ற ஈபிஎஸ் – ஓபிஎஸ் மலர்களை தூவி மரியாதை செலுத்தினர்.

பிறகு பேசிய ஓ.பன்னீர்செல்வம் “மிகவும் மகிழ்ச்சியுடன் முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளேன். இதன்மூலமாக கட்சியில் குழப்பம் ஏற்படுத்த எதிர்கட்சிகள் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. அவர்களது கனவு என்றுமே பலிக்காது” என கூறியுள்ளார்.