புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 28 ஜூன் 2022 (11:59 IST)

ஈபிஎஸ்-க்கு கூடும் பலம், ஓபிஎஸ்-க்கு சரியும் செல்வாக்கு - அதிமுக நிலவரம்!

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 9 பேர் ஈபிஎஸ் இல்லத்திற்கு வந்து ஆதரவு. 

 
அதிமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் கூடியபோது அனைத்து தீர்மானங்களும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் பொதுக்குழு கூட்டம் சிறிது நேரத்தில் முடிவடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என அவை தலைவர் தமிழ்மகன் கூறியது ஓபிஎஸ் தரப்பினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்கூட்டம் இடம் மாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த அதிமுக பொதுக்கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்திற்கு பதிலாக ஈசிஆர் அல்லது ஓ.எம்.ஆர் பகுதியில் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 9 பேர் ஈபிஎஸ் இல்லத்திற்கு வந்துள்ளது. பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஓபிஎஸ் ஆதராவாளராக  உள்ள நிலையில், பொதுக்குழு உறுப்பினர்கள் ஈபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 2,440 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.