செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 24 ஜூலை 2018 (21:25 IST)

எதையும் தாங்கும் இதயம் வேண்டும்; டெல்லி சென்று திரும்பிய ஓபிஎஸ்

இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க டெல்லி சென்ற துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சந்திக்காமல் சென்னைக்கு திரும்பிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் டெல்லிச் சென்றார். அங்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியானது.  
 
தனது டெல்லி பயணம் குறித்து டெல்லியில் பேட்டி அளித்த ஓ.பன்னிர் செல்வம் கூறியதாவது:-
 
இது அரசியல் பயணம் இல்லை. எனது சகோதரர் சிகிச்சைக்கு ராணுவ விமானம் வழங்கியதற்கு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நன்றி தெரிவிக்க வந்தேன் என்று கூறினார்.
 
ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தை நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகம் தகவல் வெளியிட்டது. இதனால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.   
 
இந்நிலையில், டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய ஓ.பன்னீர்செல்வம், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று பதிலளித்துள்ளார்.