செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 8 மே 2021 (19:20 IST)

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு மேலும் ஒரு பதவி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் முதல்வராக ஸ்டாலின் மற்றும் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்கள் என்பதும் ஏற்கனவே தெரிந்ததே
 
இந்தநிலையில் அமைச்சரவையில் நீர்வளத்துறை அமைச்சராக பதவியேற்ற துரைமுருகன் அவர்களுக்கு தற்போது மேலும் ஒரு பதவி கிடைத்துள்ளது. நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள் பேரவை முன்னவராக நியமிக்கப்பட்டுள்ளார்
 
இதுகுறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் செயலாளர் சீனிவாசன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து சட்டசபை முன்னவராக தேர்வு செய்யப்பட்ட நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே சட்டமன்ற சபாநாயகர் ஆக அப்பாவு தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது முன்னவர் பதவியும் நியமனம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது