1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 27 டிசம்பர் 2019 (14:32 IST)

உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது: மேலும் ஒரு வழக்கு!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிப்பது கூட தேர்தல் ஆணையத்திற்கு பெரிய வேலையாக இருக்காது. ஆனால் இந்த தேர்தல் குறித்து பதிவு செய்யப்படும் வழக்குகளை சந்திப்பது தேர்தல் ஆணையத்திற்கும் தமிழக அரசுக்கு மிகப் பெரிய வேலையாக இருக்கும் என கருதப்படுகிறது
 
உள்ளாட்சித் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டுமென என்று திமுக தரப்பில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று இன்று பதிவு செய்யப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த வழக்கின் விசாரணை வரும் 30-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த இந்த நிலையில் தற்போது உள்ளாட்சி தேர்தல் குறித்து மேலும் ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் ’நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை அறிவிக்க கூடாது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது ஊரக உள்ளாட்சிக்கு மட்டுமே தேர்தல் நடைபெறுகிறது என்பதும் நகராட்சி மற்றும் மாநகராட்சி இன்னும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த வழக்கில் பிறப்பிக்கப்படும் உத்தரவைப் பொருத்தே தற்போது நடைபெறும் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடங்குமா? அல்லது முடங்குமா? என்பது தெரிய வரும்