நைசாக பேசி...முதியவரிடம் பணத்தை திருடிச் சென்ற முதியவர் : வங்கியில் பரபரப்பு !
முதியவர் ஒருவர் வங்கியில் ஓய்வூதியப் பணத்தை கையில் வைத்து எண்ணிக்கொண்டிருந்த போது, அப்பணத்தை, ஒரு நபர் திருடிக் கொண்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கெளரிபட்டி என்ற பகுதியில் வசித்துவருபவர் முதியவர் கண்ணப்பன். இவர் தனது ஓய்வூதியப் பணத்தை எடுப்பதற்காக சிவங்கங்கை பேருந்துநிலையத்திற்கு அருகில் உள்ள இந்தியன் ஓவர் சீஸ் வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது வங்கியில் காசாளரிடம் பணத்தைப் பெற்றுவிட்டு அதை எண்ணக் கொண்டிருந்தார்.
இன்னொரு முதியவர் அங்கு அமர்திருந்ததால், அவர் கண்ணப்பனிடம் பேசத் தொடங்கினார். பின்னர் அவரிடமிருந்த பணத்தை பறித்துக் கொண்டு ஓடிவிட்டார். இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது, அவர்கள் வங்கியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்து பணத்தை திருடிய பழனிசாமி என்பவரை பிடித்தனர். அவரிடம் தற்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.