திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 4 டிசம்பர் 2020 (13:11 IST)

என்ன வேணா நடக்கட்டும்.. நான் சந்தோசமா இருப்பேன்! – புயல் மழையில் குதுகல குளியல்!

வங்க கடலில் தொடர்ந்து உருவாகி வரும் புயலால் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் வெள்ள நீரில் முதியவர் உற்சாக குளியல் போடும் வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் உருவாகி கரை கடந்த நிவர் புயலால் பல மாவட்டங்களில் கனத்த மழை பெய்துள்ளது. இதனால் சென்னை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் தற்போது மன்னார் வளைகுடா அருகே நிலை கொண்டுள்ள புரெவி புயலால் சிதம்பரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம் என சுமார் 13க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து சாலைகளில் வெள்ளநீர் கரைபுரண்டோடி வருகிறது.

இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிதம்பரத்தில் சாலையில் தேங்கியுள்ள வெள்ளத்தில் கொட்டும் மழையில் முதியவர் ஒருவர் சோப்பு போட்டு உல்லாசமாக குளியல் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.