குடிமகனின் கோரிக்கையை கேட்டு அதிர்ந்துபோன அதிகாரிகள்: ஈரோட்டில் பரபரப்பு
டாஸ்மாக் செல்ல இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என குடிமகன் ஒருவர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் குடிமகன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அரசின் முக்கிய வருமானமே இந்த டாஸ்மாக்கில் தான் என்று கூறலாம். விழாக்காலங்களில் டாஸ்மாக் கலெக்ஷன் சொல்லவே தேவையில்லை.
சமீபத்தில் தமிழக அரசு நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளையும், பல்வேறு பகுதியில் இருக்கும் சில மதுக்கடைகளையும் மூடியது.
இதனால் கடுப்பான குடிமகன்கள் பலர், மதுகுடிக்க நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது என புலம்பி தீர்த்தனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டம் பகுதியை சேர்ந்த செங்கோட்டையன் என்ற விவசாயி நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு மனுவுடன் வந்தார்.
அவரது மனுவை வாங்கிப் படித்த அதிகாரிகள் பேரதிர்ச்சிக்கு ஆளாகினர். அதில் எங்கள் ஏரியாவில் மதுக்கடைகளே இல்லை. பல நாட்களாக மூடியிருக்கும் மதுக்கடையை இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் மதுகுடிக்க நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. குடிக்கவே பணம் பத்தாமல் இருக்க, போக்குவரத்திற்கு கனிசமாக தொகை செலவாகிறது.
ஆகவே எங்கள் ஏரியாவில் கடையை திறங்கள் அல்லது மதுக்கடைக்கு செல்ல இலவச பஸ் பாஸ் கொடுங்கள் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் ஷாக் ஆன அதிகாரிகள், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் செங்கோட்டையன் அங்கிருந்து சென்றார்.
அவரவர்களுக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கும் போது செங்கோட்டையனின் இந்த பிரச்சனையை என்னவென்று சொல்வது.