வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 13 ஜூலை 2016 (19:58 IST)

அளவுக்கு அதிகமாக மணல் அள்ளிய லாரிகளுக்கு அபராதம்

கரூர் மாவட்டத்தில், காவிரி கரையோரம் பல பகுதிகளில், வாங்கல், குப்புச்சிபாளையம், மாயனூர், குளித்தலை, நெரூர் ஆகிய பகுதிகளில் மணல் அள்ளப்பட்டு, அது திருக்காம்புலியூர், மண்மங்கலம், ராஜேந்திரம், குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் ஸ்டாக் பாய்ண்ட் வைத்து மணல் விற்கப்பட்டு வந்தது.



இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொகுதியிலேயே போக்குவரத்து விதிகள் மீறப்படுவதாக பொதுநல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்த நிலையில், வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆங்காங்கே ஒலி மாசுகளை ஏற்படுத்தும் ஏர் ஹாரன் ஆகியவற்றைகளை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் மணல் லாரிகள் அதிக வேகமாக செல்லுதல், மது போதையில் வாகனம் ஒட்டுபவர்கள், டிரைவிங் லைசன்ஸ், வாகன விதிமீறல் உள்ளிட்ட சம்பவங்களில் மணல் லாரிகள் ஈடுபட்டு வந்தனர்.

கரூர் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கரூர் அருகே உள்ள செம்மடை பகுதியில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 12 மணல் லாரிகள் சோதனையில் சிக்கியது. இந்த வாகனத்தை சோதனை நடத்திய அதிகாரிகள், அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியது, தார்பாய் போடாமல் மற்ற வாகனங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதோடு, விபத்து ஏற்படுத்த முயற்சித்த வாகனங்களுக்கு அபராதம், லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஒட்டாதது, உரிய ஆவணங்கள் இல்லாமல் லாரி ஒட்டியது என்று பல்வேறு பிரிவுகளில் அபராதமும், வழக்கும் பதியப்பட்டது.

மேலும் இந்த 12 மணல் லாரிகளையும், கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பறிமுதல் செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இந்த சோதனையில் ரூ 80 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கபட்டது. மேலும் மணல் ரீச்சில் தார்பாய் போடாமல் செல்ல கூடாது என்றும், மணல் லாரிகள் செல்லும் இடம் என்றால் அறிவிப்பு பலகை வைக்க வேண்டுமென்று மணல் லாரிகள் ஒட்டுநர்களுக்கு உத்திரவிடப்பட்டது.

சி.ஆனந்த குமார் - செய்தியாளர்