1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: மதுரை , சனி, 18 மே 2024 (12:51 IST)

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஊராட்சி ஒன்றிய அலிவலகம் முன்பு, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பான 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கும் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
கடந்த ஆண்டுகளில் அவ்வப்போது பணிகளை கொடுத்திருந்தாலும் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி பணி வழங்காமல் புறக்கணிப்பு செய்வதால் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் ஒன்றிணைந்து 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
தொடர்ந்து பணி வழங்க கோரி கண்டன கோசங்களை எழுப்பிய மாற்றுத்திறனாளிகள்,கோரிக்கை மனுக்களை சேடபட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆசிப் - இடம் வழங்கினர்., தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் தேர்தல் வாக்கு எண்ணிக்கை  முடிந்ததும் அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.