சந்திரகிரகணம் முடிந்ததும் ஓபிஎஸ் சென்ற இடம் எது தெரியுமா?
நேற்று அபூர்வ நிகழ்வான சந்திரகிரகணத்தை லட்சக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். பிர்லா கோளரங்கத்தில் சிறுவர்கள், பெரியவர்கள் என ஒரு பெரிய கூட்டமே சந்திரகிரகணத்தை காண இருந்தது
மேலும் நேற்றைய சந்திரகிரகணத்தை முன்னிட்டு திருப்பதி கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் நடை சாத்தப்பட்டது. நேற்று முருகனின் முக்கிய விழாவான தைப்பூசமாக இருந்தபோதிலும் அனைத்து முருகன் கோவில்களிலும் நடை சாத்தப்பட்டது
இந்த நிலையில் நேற்று சந்திரகிரகணம் முடிந்ததும் துணைமுதல்வர் ஓபிஎஸ் அவர்கள் , திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு சென்று முருகனை தரிசித்தார். அவருடன் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கட்சியின் பிரமுகர்களும் இருந்தனர்.