வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 13 அக்டோபர் 2020 (09:16 IST)

முதல்வரின் தாயார் மரணம்: ஓபிஎஸ் & ஸ்டாலின் இரங்கல்!

முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் மறைவையொட்டி ஸ்டாலின் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளனர். 
 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தவுசாயம்மாள் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த  நிலையில் இன்று அவர் காலமானார். அவருக்கு வயது 93 என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தாயார் தவுசாயம்மாள் மறைவை அடுத்து உடனடியாக சொந்த ஊர் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் மறைவையொட்டி, எடப்பாடி பழனிச்சாமியை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு பேசிய ஆறுதல் கூறிய துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், நேரில் ஆறுதல் கூற சேலம் செல்கிறார். 
 
இதோடு, முதல்வரின் தாயார் மறைவுக்கு திமுக தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வரின் தாயார் மறைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டு மனவேதனைக்கு உள்ளானேன். அன்புமிக்க அன்னையை இழந்து வாடும் முதல்வர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபம், இரங்கல் என குறிப்பிட்டுள்ளார்.