1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 23 ஜூலை 2016 (13:25 IST)

காதலனை மறக்க முடியாமல் புதுகணவரை தீர்த்து கட்டிய நர்ஸ்

சென்னை, கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணி புரிந்து வந்த கன்னியாக்குமரி மாவட்டத்தை சேர்ந்த அஜிதா என்பருக்கு கடந்த மாதம் திருமணம் நடந்தது. இவர் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்துள்ளார்.


 
 
கன்னியாக்குமரி மாவட்டத்தை சேர்ந்த அஜிதாவுக்கும் அதே மாவட்டத்தை சேர்ந்த ஜெகன்பாபு எனபவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. பின்னர் அஜிதா சென்னைக்கு வேலைக்கு வந்து விட்டார்.
 
இந்நிலையில் சென்னையில் வேலைப்பார்க்கும் தனது மனைவி அஜிதாவை பார்க்க ஜெகன்பாபு ரயில் மூலம் வந்து கொண்டிருந்தார். ஆனால் அவர் திருச்சி ஜங்சன் ரயில் பாலம் அருகே அடிபட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
 
இந்த கொலையில் சந்தேகப்பட்ட காவல்துறை அவரது மனைவி அஜிதாவை கைது செய்து விசாரித்தனர். இந்த விசாரணையில் தனது கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றதை ஒப்புக்கொண்டார்.
 
காவல்துறையின் விசாரணையில் அஜிதா அளித்த வாக்குமூலத்தில், நான் பணியாற்றிய மருத்துவமனையில் பணியாற்றிய வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜான் பிரின்ஸ் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. நாங்கள் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்தோம்.
 
சென்னையில் பல இடங்களில் நாங்கள் சுற்றி இருக்கிறோம். பல முறை விடுதியில் அறை எடுத்து உல்லாசமாக இருந்திருக்கிறோம். இதனால் சில முறை கருக்கலைப்பு கூட செய்திருக்கிறேன். இந்நிலையில் சிங்கப்பூரில் வேலை செய்துவிட்டு ஊரில் பைனான்ஸ் தொழில் செய்து வந்த ஜெகன்பாபு என்பவருடன் என்னை திருமணம் செய்து வைத்தார்கள்.
 
திருமணம் ஆனாலும், என்னால் காதலன் ஜான் பிரின்ஸை மறக்க முடியவில்லை. இதனால் ஒரு மாதம் வரை கணவருடன் தாம்பத்திய உறவில் ஈடுபடாமல் சென்னைக்கு வேலைக்கு வந்து விட்டேன். இங்கு வந்து காதலனிடம் கணவருடன் வாழ பிடிக்கவில்லை என கூறி அழுதேன்.
 
காதலனை திருமணம் செய்வதற்காக கணவர் ஜெகன்பாபுவை கொலை செய்ய இருவரும் முடிவெடுத்தோம். இதற்காக ஜான் பிரின்ஸ் திட்டம் தீட்டி, வேறொரு நபரின் சிம் கார்டை திருடி என்னுடன் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் போல் கணவர் ஜெகன்பாபுவிடம் பேசி நட்பானார்.
 
பின்னர் எங்கள் இருவருக்கும் விருந்து தருவதாக கூறி அவரை சென்னைக்கு அழைத்தார். அவரும் ரயிலில் சென்னைக்கு புறப்பட்டு வந்தார். அவர் திருச்சி வந்ததும் இறங்கி காரில் சென்னைக்கு போகலாம் என கூறினார் ஜான் பிரின்ஸ்.
 
நள்ளிரவில் திருச்சியில் இறங்கிய கணவர் ஜெகன்பாபுவை பாலம் அருகே அழைத்து சென்று ஜான் பிரின்ஸ் கைச்சீப்பால் கழுத்தை இறுக்கி கொன்றார். பின்னர் கொலை செய்த தகவலை எனக்கு போனில் தெரிவித்தார். இதனால் நான் மகிழ்சியடைந்தேன்.
 
சில காலம் கழித்து திருமணம் செய்துகொள்ளலாம் என நினைத்திருந்தோம். ஆனால் ரயில்வே காவல்துறை எங்களை கைது செய்துவிட்டனர் என  அந்த வாக்குமூலத்தில் அஜிதா கூறியுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள அஜிதா காந்தி மார்க்கெட் பெண்கள் சிறையிலும், ஜான் பிரின்ஸ் திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.