ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 30 அக்டோபர் 2016 (16:22 IST)

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


 

 
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-
 
கடந்த ஆண்டு சராசரியாக 67 செ.மீ. மழை பெய்துள்ளது. இது சராசரி அளவை விட 23 செ.மீட்டர் அதிகமாகும். ஈரப்பதம் நிறைந்த கிழக்கு திசை காற்று தென்னிந்திய பகுதியில் பரவியுள்ளதால் பரவலாக மழை பெய்துள்ளது. 
 
இதன்மூலம் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழையை 3 மாதங்கள் எதிர்பார்க்கலாம். இந்த ஆண்டு சராசரியாக  44 செ.மீட்டர் வரை பெய்யும்.
 
அதிகாலையில் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. பருவமழை தொடங்கியதால் வெப்பம் தணிந்தது, என்றார்.