சென்னையில் 1000 மிமீ மழை.. கிறிஸ்துமஸ் வரை வடகிழக்கு பருவமழை: தமிழ்நாடு வெதர்மேன்
வடகிழக்கு பருவமழை கிறிஸ்துமஸ் வரை பெய்யும் என்றும் சென்னையில் 1000 மில்லி மீட்டர் வரை மொத்த வடகிழக்கு பருவமழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். \
டிசம்பர் 11, 12 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும், ஆனால் அதே நேரத்தில் சமாளிக்க கூடிய மழையாகவே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதே இரண்டு நாட்களில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் மட்டும் மழை இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மற்றபடி தென் மாவட்டங்களில், ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும், வட மாவட்ட தமிழகத்தை ஒப்பிடும்போது தென் தமிழகத்தில் குறைவான மழை தான் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
காற்றழுத்த தாழ்வு மன்னார் வளைகுடா மற்றும் அரபிக்கடல் நோக்கி செல்லும்போது உள் தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் கிறிஸ்துமஸ் வரை வடகிழக்கு பருவமழை தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் 500 மில்லி மீட்டர் வரையும் சென்னையில் 1000 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Edited by Mahendran