திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 18 மார்ச் 2021 (16:13 IST)

பட்டியலின மக்களுக்கு தனி வாக்குச்சாவடி…. நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு!

பட்டியலின மக்களுக்கு தனியாக வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்துள்ளது நீதிமன்றம்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. எப்போதும் தேர்தல் நாளன்று சில பதற்றமானத் தொகுதிகளில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், கருங்குளத்தில் பட்டியலின மக்களுக்கு தனி வாக்குச்சாவடி அமைத்துக் கொடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கின் விசாரணை இன்று நடந்த நிலையில் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஆனால் வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளனர் நீதிபதிகள்.