திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 13 டிசம்பர் 2022 (11:31 IST)

இங்கிலாந்தில் நித்யானந்தாவுக்கு விருந்தா? ஊடக செய்தியால் பரபரப்பு!

நித்யானந்தா
இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான நித்யானந்தாவுக்கு இங்கிலாந்து எம்.பிக்கள் விருந்து வைத்ததாக வெளியாகிய செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்படுபவர் சாமியார் நித்யானந்தா. இவர் தலைமறைவாக பல மாதங்களாக இருந்து வரும் நிலையில் கைலாசா என்ற புதிய தீவு நாட்டை உருவாக்கியுள்ளதாக அதற்கான நாணயம், பாஸ்போர்ட் போன்றவற்றையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

இந்நிலையில் தற்போது நித்யானந்தாவால் மற்றுமொரு பரபரப்பு எழுந்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள எம்.பிக்கள் இருவர் நித்யானந்தாவை அழைத்து விருந்து வைத்ததாக ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிக்கு இங்கிலாந்தில் விருந்து வைத்ததாக வெளியான செய்தி சர்ச்சையான நிலையில், சம்பந்தப்பட்ட எம்.பி அப்படியாக எந்த விருந்து நிகழ்ச்சியும் நடக்கவில்லை என மறுத்துள்ளாராம்.

Edit by Prasanth.K