தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு எப்போது? முதல்வர் இன்று ஆலோசனை
தமிழகத்தில் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்தாலும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என ஏற்கனவே மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளையும் வலியுறுத்திய நிலையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
அதேபோல் பள்ளிகளை தொடர்ந்து நடத்துவது, கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது ஆகியவை குறித்தும் மருத்துவ வல்லுநர்கள் உடன் முதலமைச்சர் ஆலோசனை செய்ய உள்ளதாகவும் இந்த ஆலோசனை முடிவுக்கு வந்த பின்னர் அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள என்பது குறிப்பிடத்தக்கது