1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Modified: வியாழன், 31 மார்ச் 2022 (10:06 IST)

முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம் குறித்த செய்தி தொகுப்பு!

டெல்லியில் இன்று பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். 
 
பிரதமரிடம் முன்வைக்கப்டும் கோரிக்கைகள் என்னென்ன ? என்பதை குறித்து பார்க்கலாம்...
 
 1. நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற்றுத்தர வேண்டும்.
 
 2. மேகேதாட்டு அணைக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது
 
3. பெட்ரோல், டீசல் விலை, பசுமை வீடுகள், நெடுஞ்சாலை துறை குறித்த கோரிக்கைகள் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்வர் அளித்து வலியுறுத்துவார் என கூறப்படுகிறது. 
 
அதைத் தொடர்ந்து, நாளை மாலை மத்திய அமைச்சர் அமித்ஷா வையும் முதல்வர் சந்தித்து பேசுகிறார்.
 
ஏப்ரல் 1-ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறார். 
 
ஏப்ரல் 2-ம் தேதி டெல்லியில் புதிதாக கட்டபட்டுள்ள திமுக அலுவலகத்தை முதல்வர் திறந்து வைக்கிறார்.