1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 9 மார்ச் 2022 (10:42 IST)

மின்நுகர்வோர் மனுக்களுக்கு தீர்வு காண கண்காணிப்பாளர் நியமனம்: முதல்வர் அறிவிப்பு

மின் நுகர்வோருக்கான மனுக்களை ஆய்வு செய்ய கண்காணிப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
மின்சாரம் சார்ந்த மக்களின் குறைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும் இந்த மனுக்களுக்கு தீர்வு காண கால தாமதம் ஆவது அடுத்து இதற்கென கண்காணிப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்]
 
 உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பயனாளிகள் மின் புகார்களை சரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு சார்பில் விளக்கம் அளித்துள்ளது 
 
எனவே இனிமேல் அளிக்கப்படும் மின்நுகர்வோர் மனுக்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது