பேருந்தில் சைட் அடித்தால்..? ஆண்களே எச்சரிக்கை! – தமிழக அரசு புதிய விதிகள்!
பேருந்தில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு ஏற்படுத்தி அரசாணையை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் பெண்கள், திருநங்கைகள் மற்றும் பலருக்கு இலவச பயணம் மேற்கொள்ள திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் பல பெண்கள் பயணம் செய்ய அரசு பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. அதன்படி பேருந்தில் பயணிக்கும் பெண்களை ஆண்கள் முறைத்து பார்க்கக் கூடாது. அதுபோல பேருந்தில் ஆண்கள் கூச்சல் போடுவது, விசில் அடிப்பது, ஜாடை காட்டுவது, கை தட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.
அப்படியான செயல்களில் ஈடுபடுபவரை பேருந்தில் இருந்து நடத்துனர் இறக்கி விட வேண்டும். பெண்களிடம் சில்மிஷம் செய்ய முயன்றால் அவர்களை பேருந்து செல்லும் வழியில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.